
posted 28th October 2021
கருங்காலி மோட்டை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு கிராமம். அம்மக்களில் சிலருக்கு சொந்தமாக காணியோ, வீடோ, நடைபாதைகளோ அல்லது அடிப்படை வாழ்வாதாரங்களோ இல்லாத நிலையிலே, சிலர் அரச காணிகளை தமதாக்கிக் கொள்ள உறுதியும் முடித்துள்ள காரணங்களையும் முன்வைத்து அக்கிராம மக்கள் அரச அதிபருக்கு தமது பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை வேண்டி மனுப் போட்டதையிட்டு அரச அதிபர் அப் பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டார்.
உண்மை நிலைமையைக் கண்டறுவதற்காக அரச அதிபர் வியாழக் கிழமை (28) காலை 11 30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் சகிதம் கருங்காலி மோட்டை கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், அரச காணிகளைத் தமதாக உரிமை கோருபவர்களின் விபரங்களை உடனடியாப் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படியாகவும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் கூறிய அதிபர், இவை சரியெனக் காணும் பட்சத்தில் அக் காணிகளை காணி இல்லாதவர்களுக்கும், வாழ்வாதாரம் தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரச அதிபர் தெரிவித்தார்

வாஸ் கூஞ்ஞ