
posted 11th October 2021
வீதியை விட்டு விலகிய கப் வாகனம் ஒன்று நீர் விநியோகக் குழாயுடன் மோதிச் சரிந்தது.
பளைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னே சென்ற வாகனம் ஒன்றிற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது வீதியை விட்டு விலகி நீர் குழாயுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்