
posted 12th October 2021

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (12.10.2021) யாழ்.மாநகர சபையில் இடம்பெற்றது.
இதன்போது யாழ். மாநகர முதல்வரினால் தூதுவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் யாழ். மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டார்.

எஸ் தில்லைநாதன்