
posted 21st October 2021
பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட மேதகு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை புதன் கிழமை அன்று (20.10.2021) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
கண்டி மறைமாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகைக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வாஸ் கூஞ்ஞ