
posted 18th October 2021
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு, செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்று (18.10.2018) கடையடைப்பில் ஈடுபட்டனர்.
செங்குந்தா சந்தைக்கு அண்மையான பகுதிகளில் உள்ள வீதிகளில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால், சந்தையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஒரு வருடமாக இவ்வாறான நிலை காணப்படுவதாகவும், சந்தைக்கு அண்மையிலுள்ள வீதிகளில் மரக்கறி, பழ வியாபாரத்தில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்துமாறு யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்குரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதாக செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமக்குரிய தீர்வு வழங்கும் வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் வியாபாரிகள் கூறினர்.

எஸ் தில்லைநாதன்