
posted 23rd October 2021
எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்று குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக் கடற்படையினர் இன்று இரவு கைதுசெய்திருக்கின்றனர் என தமிழகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மீனவர்கள் இருவரையும் இந்தியக் கடற்படையினர் கைதுசெய்து நாகபட்டினம் துறைமுகம் நோக்கி அழைத்துச் சென்றனர் என தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
அவர்கள் இருவரும் கரை கொண்டு செல்லப்பட்ட பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்