எம்முள் பிரிவினையை ஏற்படுத்த வந்தவரா பௌத்தமத குரு? போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
எம்முள் பிரிவினையை ஏற்படுத்த வந்தவரா பௌத்தமத குரு? போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

இன்று திங்கள் கிழமை (18.10.2021) காலை மன்னார் நகரின் நாற்சந்தியில், மடு பிரதேச பகுதியிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் மற்றும் சிறியபண்டிவிரிச்சான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தார்கள்.

மடுத்திருத்தலத்திற்குச் சொந்தமான குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட மோட்டை விவசாயக் காணியை மையமாக வைத்து, இங்கு ஒற்றுமையாக வாழும் கிறீத்தவ, இந்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, குளிர்காயத்துடிக்கும், குத்தகைக்குக் காணியை எடுத்த 27குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு சில அரச அதிகாரிகளையும், ஒரு சில ஊடகங்களையும், ஒரு சில செய்தியாளர்களையும் தம் வசப்படுத்தி, உண்மையற்ற செய்திகளை பரப்புவதன் மூலம் காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது நடைபெறக்கூடாது, இவர்கள் கூறுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது என்று தெரியப்படுத்தத்தான் நாங்கள் இப்பாதைகளைக் கையில் ஏந்தி நிற்கின்றோம்.

அவர்கள் ஏந்திய பாதைகள் அக்கிராம மக்களின் ஆதங்கத்தையும், திருத்தலத்திற்கு எதிராக செயல்படும் தீயசக்தியையும் துல்லியமாக வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

அப்பாதைகள் இவைதான்.

“ஊரில் பிளவு ஏற்படுத்தும் தீயசக்தியே உடன் வெளியேறு. ஏனெனில் உன்னை இனங்கண்டு விட்டோம்”

“கோயில் மோட்டைக் காணியை “40” வருடங்கள் செய்கைபண்ணி வருகின்றோம் என்று கூறுபவர்களே உங்கள் வயது எத்தனை? எப்போது இங்கு வந்தீர்கள்?”

“அரச உயர் அதிகாரிகளுக்கெதிராக பொய் பிரசாரம் செய்யாதே”

“பெரும் பான்மையான மக்களின் நியாயமான கருத்துகளுக்கு மதிப்பளி”

என்று தங்கள் ஆதங்கத்தை சில மணி நேரமாக நடைபெற்ற இப் போராட்டத்தைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீ மெல் மூலமாக வடக்கு மாகாண ஆளுநருக்கு மகஐர் ஒன்றை கையளித்தனர். இதன்போது மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம்.குணபாலன், திட்டமிடல் பணிப்பாளர் க.மகேந்திரன் ஆகியோரும் இதில் சமூகமளித்திருந்தனர்.

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மகஐரில் தெரிவித்திருப்பதாவது;

இலங்கையிலுள்ள திருத்தலத்தில் மடு ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். அத்துடன் இது புனித பூமியாகவும் இலங்கை மக்களுக்கான தேசிய சொத்தாகவும் உள்ளது. இம் மடுத்திருலத்துக்கு மரபு வழியாக ஏறத்தாழ 50 வருடகால ஒரு சொத்தாக பேணப்பட்டு புனித தலத்துக்கு வருவாய் தரக்கூடிய கோயில் மோட்டை வயற்காணிகள் கத்தோலிக்க மற்றும் இந்துக்கள் அடங்கிய 27 விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. அத்துடன் கத்தோலிக்க விவசாயிகளுக்கும் கத்தோலிக்க மதகுருமாருக்குமான பிரச்சனையாக இதனை வடிவமைத்ததுடன் மதங்களுக்கான பிரிவினையையும் கசப்புணர்வகளையும் ஏற்படுத்தியும் வருகின்றனர்.

இதற்கு மூலக்கர்த்தாவாக இப் பிரதேசத்துக்கு வந்துள்ள பிற சமயத்தைச் சார்ந்த நபர் ஒருவரின் தூண்டுதலும், இதில் எந்தவித சம்பந்தமில்லாத பௌத்த மத தேரர் ஒருவரை இங்கு அழைத்து வந்து மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் காணி பிரச்சனையை மதப் பிரச்சனையாக உருவெடுப்பதற்காக அரச அதிபர் உட்பட இப் பிரதேசத்தில் கடமைபுரியும் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் இக் குழுவினர் கலவரங்களை தோற்றுவிக்கும் செயல்பாட்டிலும் இறங்கியுள்ளதாக இவர்கள் தங்கள் மகஐரில் தெரிவித்திருக்கின்றனர்.

நாம் இந்த போராட்டத்தின் மூலம் கேட்டுக் கொள்வது;

இக்கிராமத்தில் வாழும் மக்கள் நாங்கள் நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் இவ்வளவு காலமும் எவ்வாறு வாழ்ந்தோமோ அவ்வாறு வாழவிடுங்கள்.

மடுமாதாத் திருத்தலத்திற்குச் சொந்தமான எவற்றிலும் பொய்யான உரிமை கொண்டாடாமல் விலகுங்கள்.

இதில் எவரும் வெளியிலிருந்து வந்து எம்முள் குளப்பத்தை ஏற்படுத்தாது அகன்று போங்கள்.

எம்முள் பிரிவினையை ஏற்படுத்த வந்தவரா பௌத்தமத குரு? போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

வாஸ் கூஞ்ஞ