
posted 1st October 2021

சிறுவருடைய தினத்தைக் கொண்டாட வேண்டிய நாங்கள் எவ்வாறு எங்களால் அத்தினத்தைக் சந்தோஷமாக்க கொண்டாட முடியும், அவர்கள்தான் வலுக்கட்டாயமாகக் காணாக்கப்பட்டுவிட்டனரே என்று செய்தியாளர் சந்திப்பில் விசனிக்கிறார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவியான மனுவேல் உதயசந்திரா.
இதோ நிழல் படங்களில் காட்டப்பட்டிருக்கும் சிறார்கள் அவர்களின் பெற்றோர்களினால் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப் பட்டவர்கள்.
இச்சிறுவர்கள் எல்லாம் யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு ஓமந்தையைத் தாண்டி
அவரவர் குடும்பங்களோடு வந்தவர்கள். பல சகாப்த்தங்கள் கடந்தும் எமது பிள்ளைகள் எம்மிடம் வராத இந்நிலையில் இச்சிறுவரின் தினத்தை ஒரு துக்க தினமாகவே அனுஷ்டிக்கின்றொம்.
ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதுதானே இச் சம்பவங்கள் நடைபெற்றன. அவரை நம்பித்தானே வெள்ளை கொடியை ஏந்தியவண்ணம் எம்பிள்ளைகள் சரணடைந்தார்கள். இப்போ து ஜனாதிபதி கூறுகின்றார், காணாமல் போனவர்களுக்கு மரண சான்று பத்திரம் தருவதாக. அதன் அர்த்தம்தான் என்ன? நாங்கள் வீதிகளில் நின்று எங்கள் பிள்ளைகளுக்காக போராடுவது மரண சான்றிதழ்களுக்கும் நஷ்டஈட்டுக்கும் அல்ல. ஜனாதிபதி ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் அவரின் குடும்பத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றால் அவர் இதை ஏற்றுக்கொள்வாரா? மரண சான்றிதழ் பெறுவதற்கு நாங்கள் இவரிடம் கையேந்த தேவையில்லை. நினைத்தால் நாங்கள் ஒரு சத்திய கடதாசியை முடித்துக்கொண்டு பெற்றுக் கொள்ளலாமே.
எனினும், ஜனாதிபதி புலம்பெயர்ந்தவர்களுடன் இது தொடர்பாக கதைக்க போவதாக பேச்சுவாரத்தை செய்யப்போவதாக அறிகின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். புலம்பெயர்ந்தவர்களுடன் இது தொடர்பாக கதைக்க போவதாக ஜனாதிபதி கூறுவதென்பது என்னவென்று எமக்கு புரியவில்லை என உதயசந்திரா .தெரிவித்தார்.
இவ்வூடகச் சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ