எந்த நிலையிலும் சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றவே வேண்டும் - அரசாங்க அதிபர்

தற்போதுள்ள இயல்பு நிலையை உதா சீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயல்படுங்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித் துள்ளார்.
நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ். மாவட்டமானது பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மாத்திரமே தடைப்ப ட்டுள்ளது.

மாவட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனியார் துறையினரும் அதேபோல இலங்கைப் போக்குவரத்துச் சபையினரும் தங்கள் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கிடையிலான சேவைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

அதே நேரத்தில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மட்டுப்பாடுகளுடன் ஏனைய செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்விச் செயல்பாடுகள் தவிர்ந்த ஏனைய செயல்பாடுகள்யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் தனியார் கல்வி செயல்பாடுகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்வியமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஒன்றுகூடும் செயல்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பொது நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு சில கட் டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் கடந்தகாலங்களில் ஒப்பிடும் போது தொற்று நிலைமை அதிகரித்த நிலை காணப்பட்டது.

எனவே, தற்போதுள்ள இயல்பு நிலையை பொதுமக்கள் உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அவதானமாக செயல்படவேண்டும்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளோடு செயல்படுவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இந்த பொதுமுடக்கத்திற்கு செல்லாது நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்துக்களின் நவராத்திரி விரதம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. எனவே பொது மக்கள் கட்டுப்பாடுகளை மீறாது தமது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

அத்தோடு பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதோடு தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

எனவே, ஏற்கனவே நமக்கு பொதுமுடக்கம் தொடர்பான அனுபவம் உள்ளது. எனவே மீண்டும் ஒருபோதும் பொதுமுடக்கத்துக்கு வழிவகுக்காது இயல்பான நிலையினை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

எந்த நிலையிலும் சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றவே வேண்டும் - அரசாங்க அதிபர்

எஸ் தில்லைநாதன்