
posted 14th October 2021
இலங்கை அரசின் இன்றைய சில நிலைப்பாடுகள் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரும் பதாகைகள் நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய வளங்களை விற்பதற்கு எதிராக - எண்ணெய், துறைமுக மற்றும் மின்சார ஒன்றிணைந்த கூட்டணியினால் இந்த பதாகைகள் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச பிரதான மின் பொறியியலாளர் அலுவலகம் முன்பாகவும் இப்பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய வளங்களை விற்பதற்கு எதிராக எனும் கருப்பொருளைக் கொண்ட இப்பதாகையில்,
கெரவலப்பிட்டிய மின் நிலயத்தை அமெரிக்காவுக்கு விற்பதற்கு
துறைமுகத்திற்கு சொந்தமான இடங்களையும், சேவைகளையும் விற்பதற்கு
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை ஒழித்து எண்ணெய்த்தொட்டிகளை (தாங்கிகளை) விற்பதற்கு
- எதிராக நாம் அனைவரும் ஒன்றினைவோம் என இப்பதாகையில் கோரப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்