
posted 17th October 2021

கலாநிதி ஏ.எல்.எம்.ஜெமீல்
கல்முனை பொலிஸ் மாவட்டத்துக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி பதுளை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பி.எம்.ஜயரத்ன மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்தில்பிரதம பொலிஸ் பரசோதகராக கடமையாற்றி வந்த நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக
பதவி உயர்வு பெற்று, மன்னார் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றலாகிச் செல்லும் கலாநிதி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோருக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு சனிக்கிழமை (16) மாலை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரினதும் சிறப்பான சேவைகள் மற்றும் நிர்வாகத் திறமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவரும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் சார்பில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீனால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனையில் கடமையாற்றிய தமது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொலிஸாருக்கும் பிரியாவிடை நிகழ்வை ஒழுங்கு செய்த சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நிர்வாகத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இவர்கள் இருவரும் தமதுரையில் குறிப்பிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்று, உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
