
posted 9th October 2021
இளைஞர்களின் முன்மாதிரியான செயல்பாட்டால் கசிப்பு காய்ச்சிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - திருவையாறு பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருவையாறு பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தபோதும் அவர்கள் அங்கு செல்லவில்லை.
இந்த நிலையில் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற விசேட அதிரடிப் படை 200 லீற்றர் கோடா, 30 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை கைப்பற்றியதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர்.

எஸ் தில்லைநாதன்