
posted 6th October 2021
யாழ்., வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் மரணத்துக்கான காரணம் என்ன என்று தெரியவரவில்லை.
ஜெகதீஸ்வரன் டினுசியா (வயது - 19) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்