இலவச பயிற்சிநெறி - ரூபா 4000 ஊக்குவிப்புத் தொகையுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
இலவச பயிற்சிநெறி - ரூபா 4000 ஊக்குவிப்புத் தொகையுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு மாத குறுகிய கால கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இவற்றில் தற்பொழுது ஆரம்பமாக உள்ள பயிற்சிகள் பின்வருமாறு;

மின்னியலாளர், அலுமினிய உருவமைத்தல், நீர் குழாய் பொருத்துனர், உருக்கி ஒட்டுனர், மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பழுது பார்த்தல், மரப்பொறி இயக்கவியாளர் மற்றும் தையல் பயிற்சி ஆகியவற்றுக்கான பயிற்சி நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பயிற்சி நெறிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான அனுகூலங்களாக பயிற்சி நெறிகள் யாவும் இலவசம் எனவும், இவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக மாதாந்தம் 4000 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், போக்குவரத்துக்கான பருவக்காலச் சீட்டு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற என்.வீ.கியூ (NVQ) சான்றிதழும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ள விரும்புவோர் எதிர்வரும் 13.10.2021 புதன் கிழமைக்கு முன்பதாக பணிப்பாளர், தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 021 222 0028 அல்லது 021 221 2402 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக விபரங்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சிநெறி - ரூபா 4000 ஊக்குவிப்புத் தொகையுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வாஸ் கூஞ்ஞ