இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.10.2021)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (25.10.2021) மரணமடைந்தவர்களில் 12 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.

இதில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 22 பேரும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 6 பேரும், 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவரும் மரணித்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.10.2021)

எஸ் தில்லைநாதன்