
posted 1st October 2021

பருத்தித்துறை மற்றும் நெல்லியடி நகரப் பகுதிகளில் இன்று
வெள்ளிக்கிழமை(01) காலை 551 ஆம் படைப்பிரிவின் இராணுவத்தினரினால் கிருமி தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
பருத்தித்துறை, கற்கோவளம், எள்ளங்குளம் ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த இராணுவத்தினர் பவுசர் வண்டிகள்
மூலம் கொரொனாத் தடுப்பு தொற்று நீக்கியை எடுத்துவந்து வர்த்தக
நிலையங்கள், வீதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு விசிறினர்.
இன்று வெள்ளிக்கிழமை(01) தனிமைப்படுத்தால் ஊரடங்கு நிறைவுற்றதை தொடர்ந்து நகரங்களுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்லலாம் என எதிர் பார்க்கப்பட்டதால் விசேட ஏற்பட்டின் பேரில் தொற்றுநீக்கி விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்