
posted 15th October 2021

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனம் – பாரவூர்தி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (14.10.2021) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படகு ஒன்றை இழுத்துச் சென்ற இராணுவ வாகனமும் சிமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன்