இரத்தினத்தின் மறைவு அஞ்சலி உரையில் வருத்தத்தைத் தெரிவித்த பரஞ்சோதி

இலங்கை தமிழரசுக் கட்சியினதும், இச்சபையின் மூத்த உறுப்பினருமான இரத்தினத்தின் மறைவுக்கு இச்சபையில் அஞ்சலி உரை நிகழ்த்தப்படாமைக்கு கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கரவெட்டி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்

தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் க.பரஞ்சோதி நேற்று வியாழக்கிழமை(21) இடம்பெற்ற மாதாந்த கூட்டம் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அவருடைய உரையில் பேசிய போது;

கடந்த கூட்டத்தில் தலைமை வகித்த தவிசாளர் ஆரம்பத்தில் உறுப்பினர் இரத்தினம் காலமாகிவிட்டார். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துவிட்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

ஆனால் தமிழரசுக்கட்சியின் ஆளுகைக்குட்பட்ட சபையில் ஒரு மூத்த உறுப்பினர் இச்சபையில் இரண்டு தடவைகள் அங்கம் வகித்த அமரர் இரத்தினம் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமாவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு இச்சபையில் அஞ்சலி உரை நிகழ்த்தப்படவில்லை, பதிவேட்டிலும் இடம்பெறவில்லை.

அமரர் இரத்தினமும் நானும் அரசியல், சமூக பொது வேலைத் திட்டங்களில் ஒன்றாக பயணித்துள்ளோம். ஒரு கோப்பையில் சாப்பிட்டு உள்ளோம். அஞ்சலி உரை சபையில் நிகழ்த்தப்படாமையினால் நான் மிகுந்த கவலை படுகின்றேன்.

என சக உறுப்பினர் க.பரஞ்சோதி சபையில் உரையாற்றிய போது பலத்த கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் க.இளங்கோ அஞ்சலி உரை நிகழ்த்தாமைக்கு கண்டனம் தெரிவித்தார்.

இரத்தினத்தின் மறைவு அஞ்சலி உரையில் வருத்தத்தைத் தெரிவித்த பரஞ்சோதி

எஸ் தில்லைநாதன்