இரங்கல் செய்தி - M A சுமந்திரன்
இரங்கல் செய்தி - M A சுமந்திரன்

M A சுமந்திரன்

இரங்கல் செய்தி

இலங்கையில் உள்ள பிரதானமான மதவழிபாட்டு ஸ்தலங்களில் ஒன்றாகிய நல்லூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாக அதிகாரியும் அறங்காவலருமான பெருமதிப்புக்குரிய குமாரதாஸமாப்பாண முதலியார் இன்றைய தினம் (09-10-2021) காலமாகிவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தை தந்தது.

1964ம் ஆண்டு ஆலயத்தினுடைய அறங்காவலராக பொறுப்பெடுத்த காலம் தொடக்கம் தற்போதுவரை ஆலயத்தினை நிர்வகித்து வருவதுடன் அசாதாரணமான காலங்களிலும் நெருக்கடியான காலங்களில் நிர்வாகத்தை குறைவின்றி நடாத்தி கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, ஆண்டவன்முன் அனைவரும் சமம், என்ற கொள்கைகளை தொய்வின்றி நிறைவேறும் உதாரணபுருஷராக திகழ்ந்தார்....மிகப்பிரதானமான ஆலயத்தின் தலைவராகவும் உரிமையாளராகவும் இருந்தும் தமக்கென்று எந்தவித முக்கியத்துவமான சடங்கு சம்பிரதாயங்களோ தவிர்த்து ஆலயத்துக்குவரும் பக்தர்களுடன் பக்தானகவும் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற அந்த உன்னத நிலையினை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக இருந்ததும் அவரின் பரந்த மனதை எடுத்துக்காட்டியதும் ஆகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் பொது மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

ஜனாதிபதிசட்டத்தரணி
M A சுமந்திரன்.
யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர். ஊடகப் பேச்சாளர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு

இரங்கல் செய்தி - M A சுமந்திரன்

எஸ் தில்லைநாதன்