
posted 24th October 2021
இலங்கை கடற்படையினர் அன்மையில் தீவகத்தில் இந்திய படகுகள் பாதிக்கப்பட்டதற்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இன்று அவர் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இலங்கை கடற்படையினர் அண்மையில் தீவகத்தில் இந்திய படகுகள் பாதிக்கப்பட்டதற்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்றும், கடற்படையால் கைது செய்யப்பட்ட 2 பேரும் தாயகம் திரும்பிய பின்னரே உண்மை நிலையை கண்டறிய முடியும் என்றும்,
பெரிய கப்பல்கள் வருகிறது என்றால் சின்ன படகுகளை கவனிக்காமல் மோதுகிறார்கள் என்பது அர்த்தம்.
கற்களை வைத்துக் கொண்டும், போத்தில்களை வைத்துக்கொண்டும் உடைப்பதும், அடிப்பதும்,
மீன்களைப் பறிப்பதும்,கொல்வதும் உங்கள் வேலை அல்ல. அதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே நாங்கள் தமிழ்நாட்டினுடைய உயிரிழந்த குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாவங்களையும், கவலைகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நீங்களும் நாங்களும் உணர்ச்சி வசப்படாமல் எமக்கிடையேயுள்ள தொப்புள் கொடி உறவைப் பாதுகாத்து பேசித் தீர்க்க வேண்டிய இந்த பிரச்சனையை பேசியே தீர்ப்போம்.
சேதமாக்கப்பட்டதோ அங்கு வந்த படகுகலல்ல, மாறாக அவரகளுடைய உடமைகளுக்கே என்பதனால் இவ்வாறான செய்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இன்றைக்கு தாய்வான் றோளர்கள் நீட்ட தூரம் சென்று மீன்களைப் பிடிப்பது போல, தென்னிலங்கையிலிருந்து வந்து எமது பகுதிகளில்
மீன்பிடிக்கிறார்கள். அதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
அவ்வாறு நீங்கள் சென்றால் தென்னிலங்கையிலிருந்து பலநாள் படகுகளை இயக்குபவர்கள் மாலைதீவுக்கு அண்மை வரை செல்கிறார்கள் அத்துடன் எத்தனையோ இடங்களுக்கு செல்கிறார்கள். மத்தியகிழக்கு நாடு வரை சென்றும் மீன்களை பிடிக்கிறார்கள்.
எங்களுடைய போராட்டம் நடைபெற்றபோது, போர் நிறுத்தத்திற்காக எத்தனையோ கடற்றொழிலாளர்களின் பிரதேசங்களுக்கு
சென்றிருக்கிறேன். பல தலைவர்களுடைய சுக துக்க நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறேன்,
எங்களுடைய மீனவர்களுடைய கடற்றொழிலாளர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசினுடைய கடமையே.
அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய அரசு. தமிழக அரசுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.
இழிவைப்படகு தொழிலை விஞ்ஞான ரீதியாக அனுமதிக்கப்பட்ட விதத்திலே அனுமதியுங்கள் தவறினால் தண்டியுங்கள்.
இது ஒரு சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்றார்.

எஸ் தில்லைநாதன்