
posted 30th October 2021

நீதிபதி கௌரவ. ஸ்ரீ நிதி நந்த சேகரன்
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ. ஸ்ரீ நிதி நந்த சேகரன் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதையொட்டிய சேவை நலன் பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை (30.10.2021) நடைபெறவுள்ளது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், சாய்ந்தருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளதாக, கல்முனை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில், கல்முனை நீதி வலயத்திலுள்ள சகல நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கல்முனையின் நீதி தேவதையாய் கடந்த மூன்று வருடங்களாகக் கோலோச்சிய கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்த சேகரன் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஓய்வுபெறுவதையொட்டி மேற்படி நிகழ்வை கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தவுள்ளதாக சங்கச் செயலாளர் சட்டதரணி ஆரிகா காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனையில் மேல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் சட்டத்தரணிகளுக்கு சிறந்த ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் மக்களின் நல்லபிமானத்தை வென்றவராகவும், திகழ்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்த சேகரனின், துணிச்சலான பணிகளைப் பாராட்டி அமெரிக்க அரசு 2009 ஆம் ஆண்டின் “துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்