இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் அடாவடிச் செயல்களுக்கு அமைச்சரின் அதிரடி முடிவு

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வியாபித்துள்ளது.

குறிப்பாக கடந்த சில நாள்களாக இந்தியாவிலிருந்து வருகை தரும் மீன்பிடி ட்றோலர்கள் உள்ளுர் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகி வருவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது பெறுமதிமிக்க வலைகளை இந்திய இழுவைப் படகுகள் அழித்து துண்டாடி வருவதாகவும் இந்த மீனவர்கள் கூறினர்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லை என மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தாமே நேரடியாக கடலுக்குச் சென்று அவர்களை கட்டுப்படுத்தவேண்டி நேரிடும் என அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னைய செய்தி

எல்லை தாண்டி அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறு கடற்றொழில் அமைச்சர் பருத்தித்துறை மீனவர்களுக்கு தொலைபேசி ஊடாக அறிவுறுத்தியுள்ளார் என பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்தனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படும் வரையில் அரசியல் பிரமுகர்கள் எவர் வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்று பருத்தித்துறை முனைப் பகுதி மீனவர்கள் நேற்று முன் தினம் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தொலைபேசி ஊடாக மீனவப் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர்,
எல்லைதாண்டி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறும் அதனால் ஏற்படும் விளைவுகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார் என்று மீனவப் பிரநிதிகள் தெரிவித்தனர்.

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் அடாவடிச் செயல்களுக்கு அமைச்சரின் அதிரடி முடிவு

எஸ் தில்லைநாதன்