
posted 21st October 2021
1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் (IPKF) கடமையில் இருந்த 21 ஊழியர்களை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் உருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூரித்தி. பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்