
posted 27th October 2021
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை செயளாலரை இடம் மாற்றக்கோரி மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் இன்று புதன்கிழமை (27) காலை 11 மணியலவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயளாலரின் ஆழுமையற்ற செயற்பாட்டாலும் வினைத்திரன் அற்ற முடிவுகளாலும் அபிவிருத்திகள் மற்றும் வேலைதிட்டங்கள் அனைத்தும் பின் நோக்கி காணப்படுவதாகவும், எழுத்து மூல செயற்பாடுகள் மட்டுமே இடம் பெறுவதாகவும், பெளதீக செயற்பாடுகள் எவையும் இவரால் இடம் பெறுவதில்லை என கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டதை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட மாந்தை பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாந்தை பிரதேச சபை செயளாலர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல முறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் இடம் மாற்றம் செய்வதாக கோரியும் இதுவரை இடமாற்றம் செய்ய வில்லை எனவும், விரைவில் புதியதொரு ஆளுமையுள்ள பிரதேச செயளாலரை மாற்றி நியமிக்குமாறு
கோரிக்கை விடுத்தே இப் போராட்டத்தை நடாத்துவதாக இவர்கள் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ