
posted 28th October 2021
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாக ராஜா, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவி னால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பாராளு மன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்ட செயலாளர், சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலா ளர் என உயர் பதவிகளை வகித்த திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த மாதம் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு வின் உறுப்பினராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.
அதற்கு சபாநாயகர் தலைமை யிலான பாராளு மன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, சிரேஷ்ட நிர்வாக அதிகாரி யான வி. திரு.சிவஞானசோதியின் மறைவால் பொதுச் சேவை ஆணைக்குழு வின் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சிரேஷ்ட அதிகாரி சுந்தரம் அருமைநாயகத்தை நியமிக்கு மாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப் பட்ட யோசனைக்கும் பாராளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

எஸ் தில்லைநாதன்