
posted 31st October 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரில் மழையில் நனையும் வயோதிபரை கவனிப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய பகுதியில் யாசகம் மேற்கொண்டு வந்த மேற்படி கண் தெரியாத வயோதிபர் நெல்லியடி நகர் பகுதியில் உள்ள கடை ஓரமாக மழையில் நனைந்தவாறு நேற்று(30) மதியம் காணப்பட்டார். அவரை உரிய இடத்தில் சேர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்