
posted 7th October 2021

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். ஆனால், நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்களுக்கு அமர்வதற்கு கதிரைகள் கூட வழங்கப்படவில்லை. எனினும் எங்களின் வலியுறுத்தலால் அவர்கள் எங்களுடன் அமர்ந்து உரையாட கதிரைகளைப் பெற்றுக் கொடுத்தோம்.
நாங்கள் அரசியல் கைதிகளை சந்தித்து பேசும் போது, சிறைச்சாலை ஊழியர்களும் அருகில் இருந்தமையினால் எங்களால் பல விடயங்களை பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தங்களை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் நீதி அமைச்சர் தன்னிடம் அவர்கள் அப்படி எதுவும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் கைதிகள் எங்களிடம் மாற்ற நடவடிக்கைகளைப் பற்றி தெரிவித்தார்கள். இது இவ்வாறிருக்க, அரசியல் கைதிகளுக்கு அதேபோன்று நடைபெற்ற சம்பவத்திற்கு நீதிஅமைச்சர் மன்னிப்பு கோரியமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.
இதேவேளை, அண்மையில் சில அரசியல் கைதிகள் முகப்புத்தகத்தில் “இவர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்” என்று பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனவும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம்