அப்துல்கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்ச்சி
அப்துல்கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்ச்சி

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று யாழ்.பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது .

யாழ். பொது நூலகத்தின் பிரதம நூலகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர்,யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா இடர்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டோரின் பங்குபற்றுதலுடன் சுகாதார நடைமுறையை பின்பற்றி இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்.பொது நூலக ஊழியர்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

அப்துல்கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்ச்சி

எஸ் தில்லைநாதன்