
posted 25th October 2021
அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் ஒன்றான நகர அழகு படுத்தும் திட்டத்தில் மன்னார் நகர அழகு படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 26.10.2021 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கும், இதையடுத்து இதே தினம் காலை 11.30 மணிக்கு கௌரவ மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக பேசாலை சென் விக்டரி மைதானம் புனர்நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 5.000,000/=க்கான வேலைத் திட்டம் ஆரம்ப நிகழ்வும், மாலை 02.30 மணிக்கு முசலி பி.பி. பொற்கேனி ஊடாக அலக்கட்டு வீதியை காபட் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந் நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு இவ் அபிவிருத்தி வேலை திட்டங்களை ஆரம்பித்து வைக்க இருப்பதாக இவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ