
posted 25th October 2021
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டின்படி, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை நீக்கவும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து, வடமராட்சியில் உள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் இணைந்து உடுப்பிட்டி சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை உடுப்பிட்டி சந்தியில் உள்ள மகளிர் கல்லூரிக்கு முன்பதாக இன்று திங்கட்கிழமை (25 ) பிற்பகல் மேற்கொண்டனர்.
இப் போராட்டத்தில் வடமராட்சியின் பல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல தொழிற்ச் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் வட மாகாண இணைப்பாளருமான தீபன் திலீசனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்