
posted 10th October 2021
கிளிநொச்சி - தருமபுரம் -பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கால்வாயிலிருந்து இன்று மீட்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இராமலிங்கம் புஸ்பராஜ் (வயது 51) எனும் 6 பிள்ளைகளின் தந்தையாவார். இவரை காணவில்லை என்று உறவினர்கள் தேடிவந்த நிலையிலேயே நேற்று நண்பகல் கால்வாயிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்