174 கமநல விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இரசாயன உரம், கிருமிநாசினி வேண்டி கவனயீர்ப்பு போரட்டம்

இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி மன்னார் மாவட்டத்தின் 174 கமநல விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இப் போராட்டமானது திங்கள் கிழமை (25.10.2021) உயிலங்குளம் மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலைய பகுதியிலிருந்து விவசாயிகள் பதாதைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி விவசாயிகளுக்கு இரசாயன பசளை மற்றும் கிருமிநாசினியை வழங்கு என்ற கோஷங்களுடன் இப் போரட்ட அணி உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரையும் சென்று அடைந்தது.

அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் அவர்களிடம், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்து அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு விவசாயிகள் வேண்டிக் கொண்டனர்.

அத்துடன் வன்னி பாராளுமன்னற உறுப்பினர்களிடமும் மகஐர்கள் கையளிக்க்பட்டன.

அத்துடன் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்னற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், வினோதராதலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி ஆகியோரும் அதிகமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தின் வன்னி பாராளுமன்னற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், வினோதராதலிங்கம் மற்றும் மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சில்வா ஆகியோரும் உரையாற்றினர்.

174 கமநல விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இரசாயன உரம், கிருமிநாசினி வேண்டி கவனயீர்ப்பு போரட்டம்

வாஸ் கூஞ்ஞ