
posted 31st October 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று (30.10.2021) கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாதம் தோறும் 30ஆம் திகதி வீதியில் கவனவீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்