
posted 31st October 2021
மாகாணங்களுக்கு இடையில் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையை மீளவும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கண்டி பெலியத்த - மாத்தறை - காலி - மாஹோ - குருநாகல் - இறம்புக்கணை - புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்