
posted 19th October 2021

"தலைக்கீழ் நிழல்” வீட்டுத் திட்டத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிக்கும் நிகழ்வின் வரிசையில் வீடு கையளிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று திங்கட்கிழமை (18.10.2021) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் உடுப்பிட்டி, இமையாணன் பகுதியில் கணவனை இழந்து சிறு பிள்ளையுடன் நிரந்தர வீடு இன்றி வாழ்ந்து வந்த பெண்ணுக்கே இராணுவத்தினரால் இவ்வாறு வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க பாலத்தினை மேலும் உறுதிபடச் செய்யும் முகமாக இலங்கை இராணுவத் தளபதியினால் வீடு அற்றவர்களுக்கான வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் எண்ணக் கருவிற்கு அமைவாக 55வது படைப்பிரிவின் சேனாதிபதி ஜயவர்த்தன, 551 படைத் தளபதி பிரிகேடியர் விக்கிரம சிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
4ஆவது சிங்க படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் நிரோஜன் தவுலகல அமைக்கப்பட்ட இவ் வீடானது வீட்டின் உரிமையாளர் செல்வச்சந்நிதி தர்சினி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன், மற்றும் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்