
posted 18th October 2021
நவாலி தெற்கில் வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில், இருவர், மானிப்பாய் பொலிஸாரால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
நவாலி தெற்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடு ஒன்றின் வேலிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வேலி அண்மையிலேயே அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலிக்கு தீ வைத்தமை தொடர்பாக வீட்டு உரிமையாளர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 19 மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைதுசெய்தனர்.

எஸ் தில்லைநாதன்