
posted 7th October 2021
சைக்கிளில் பயணித்தவரை 'படி' ரக வாகனம் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் மரணமானார்.
தென்மராட்சி - சாவகச்சேரி நகரப்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அதே இடத்தை சேர்ந்த நடராசா பொன்னுச்சாமி (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.
வீதியோரத்தில் தரித்து நின்ற வாகனத்தை சைக்கிளில் முதியவர் விலகிச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த படி ரக வாகனம் அவரை மோதியதாக கூறப்படுகின்றது.
இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்துக் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்