
posted 17th October 2021

மன்னார் மாவட்டத்துக்கு நேற்று சனிக்கிழமை (16.10.2021) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.
கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பிலுள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை அவர் ஆரம்பித்தார்.
இந்நிலையில், அவர் நேற்று சனிக்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டார்.

எஸ் தில்லைநாதன்