
posted 7th October 2021

புதிய ஆளுநர் ஜீவன் தியாகராசா
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராசா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் புதன்கிழமையின் பின்னர் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் என்று தெரிய வருகின்றது.
ஜீவன் தியாகராசா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக 1984ஆம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றினார். மனித உரிமைகள் செயல்பாட்டாளரான இவர், மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (Consortium of Humanitarian Agencies) என்ற அமைப்பையும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக தற்போது பதவி வகிக்கும் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் முன்னரே பதவியிலிருந்து விலகி செல்ல ஜனாதிபதியிடம் அனுமதி கோரியிருந்தார் என்பதும் நினைவில்கொள்ளத்தக்கது.

எஸ் தில்லைநாதன்