முதியவர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்

கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதல் நடத்தியது.

கோப்பாய் பூதர்மடத்தடியை சேர்ந்த கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது 58) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை மாலை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டது. வீட்டில் இருந்த முதியவரையும் அந்தக் கும்பல் தாக்கியது.

குறித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞருக்கும் வீட்டில் வசிப்போருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே, குறித்த இளைஞன் வன்முறைக் கும்பலை கூலிக்கு அமர்த்தி தம் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதியவர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்

எஸ் தில்லைநாதன்