
posted 26th October 2021
யாழ்ப்பாணத்தில் 08 தொற்றாளர்கள் உட்பட வடக்கு மாகாணத்தில் 14 தொற்றாளர்கள் திங்கட்கிழமை (25.10.2021) அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே புதிய தொற்றாளர்கள் இனஙகாணப்பட்டனர்.
இதன்படி, யாழ். போதானா மருத்துவமனையில் 05 பேர்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவர்
ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
சங்கானை பிரதேச மருத்துவமனையில் ஒருவர்
என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில்,
மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவர்
மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவர்
முல்லைத்தீவு விமானப் படை முகாமில் ஒருவர்
என மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தவிர, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

எஸ் தில்லைநாதன்