
posted 18th October 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 31 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அன்ரிஜென் பரிசோதனைகளில் 22 பேரும், பி. சி. ஆர். சோதனையில் 9 பேருமே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி,
ஊர்காவற்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர்
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர்
யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர்
காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர்
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர்
மருதங்கேணி சுகாதார மருத்துவஅதிகாரி பிரிவில் ஒருவர்
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர்
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர்
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர்
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர்
என 22 பேர் தொற்றார்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று, நேற்று யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். சோதனையில் தெல்லிப்பழை ஆதார மருத்துவனையைில் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையைில் 4 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவனையைில் 2 பேர், சாவகச்சேரி மருத்துவ வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என- 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 175 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி,
யாழ். போதனா மருத்துவமனையில் 3 பேர்,
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 02 பேர்
என யாழ். மாவட்டத்தில் 05 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
இதேபோன்று,
வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 2 இருவருக்கும்
வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவருக்குமாக 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மன்னார் கடற்படை முகாமில் 3 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்