மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.10.2021)

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரழந்தவர் K.பாக்கியலிங்கம் (வயது 79) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சுப்ரமணியம் பிரம்மா (வயது 73) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
வவுனியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உட்பட வடக்கில் இன்று 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களில் உயிரிழந்த இருவரும் உள்ளடக்கம். அவர்களில் ஒருவர் சாவகச்சேரியிலும் மற்றொருவர் வவுனியாவிலும் உயிரிழந்திருந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று சனிக்கிழமைமேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.10.2021)

எஸ் தில்லைநாதன்