
posted 2nd October 2021
மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை (01.10.2021) ஒன்பது பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் கொரோனா தொடர்பான நாளாந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் 01.10.2021 அன்றைய தின மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பான தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
நேற்றைய தினம் (01), 9 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில்;
கடற்படையினர் ஒருவர்
மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர்
எருக்கலம்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் 04 நபர்கள்
முசலி சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி பிரிவில் 02
பேர் மற்றும் மாந்தை மேற்கு பகுதியில் ஒருவருமாக
மொத்தமாக09 பேர் இத் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்திலிருந்து இதுவரை 2129 நபர்கள் இத் தொற்று நோய்க்கு உள்ளாகியிருப்பதாக பதிவுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு 2112 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டதில் இவர்களில் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 1580 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் இனம் காணப்பட்டவர்களில் 532 நபர்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ