புதிய பொலிஸ் பதவிகள் வடக்கில் வெற்றிடம்.
புதிய பொலிஸ் பதவிகள் வடக்கில் வெற்றிடம்.

வடக்கு மாகாணத்தில் வேலையில்லா பிரச்னை காரணமாகவே இளைஞர்களிடம் வன்முறைகளும், போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னிடம் தெரிவித்தார் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

வடக்குக்கு பயணம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரை நேற்று புதன்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோதே ஆயர், மேலும் தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு,

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம்தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். இதனை செயல்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று பொலிஸ் மா அதிபருக்குச் சுட்டிக்காட்டினேன்.

“இளையோர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகின்றன.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது. ஏற்கனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றிவருகிறார்கள்.

மேலதிகமாக தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில், வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வடக்கிலிருந்து பொலிஸ் சேவையில் இணைய விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப்படும்” என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார் என ஆயர் தெரிவித்தார்.

புதிய பொலிஸ் பதவிகள் வடக்கில் வெற்றிடம்.

எஸ் தில்லைநாதன்