
posted 15th October 2021
இரவு பால் குடித்து விட்டு தூங்கிய ஒன்றரை மாதப் பெண் குழந்தை ஒன்று படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த குழந்தை அசைவற்றுக் காணப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற நிலையில் ஏற்கனவே குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வளவு, தனங்கிளப்பு வீதியைச் சேர்ந்த அபூ ஹுரைறா ஹாஜர் என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்