நிரந்தரமாக்குக!

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அரசின் திட்டத்தின் கீழ், பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் நிரந்தரமாக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தற்சமயம், ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம், ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன சார்பில் மேற்படி கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த அமைப்புக்கள் நிரந்தரமாக்குதலை வலியுறுத்தும் சுவரொட்டிகளையும் முக்கிய இடங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் முன்பாக காட்சிப்படுத்தியுள்ளன.

“பேசியது போதும்;” எனும் தலைப்பிலான இச்சுவரொட்களில்

“வாக்குறுதி அளித்தபடி 53000 பட்டதாரி பயிலுனர்களையும், செப்டம்பர் 3 ஆம் திகதியிட்டு விரைவில் நிரந்தரமாக்குக”

எனக் கோரிக்கை வலியுறுத்தப்பட்ட வாசகம் காணப்படுகின்றது.

நிரந்தரமாக்குக!

ஏ.எல்.எம்.சலீம்