
posted 6th October 2021
யாழ்ப்பாணத்தில் 14 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 176 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 6 பேர்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 3 பேர்
கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 2 பேர்
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர் என 13 பேருடன்
காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று, முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 3 பேர்
மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவர் என நால்வரும்
வவுனியா பொது மருத்துவமனையில் 2 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 43 பேர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன் தினம் (ஒக்-03) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்