
posted 15th October 2021

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் நவராத்திரிவிரதம் இந்து மக்களால் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டு இன்று 15 ஆம் திகதி இறுதிநாள் விஜயதசமி சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.
நவராத்திரி விரதத்தின் இறுதி 10 ஆம் நாளான இன்று ஆயுதபூசை, விஜய தசமி, வித்தியாரம்பம், கேதார கௌரி விரதத்தின் தொடக்கநாள் ஆகிய அனைத்தும் நிறைந்த நன்னாள் எனப்படுகின்றது.
தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள அரச திணைக்கள அலுவலகங்கள், வங்கிகள், வியாபார நிலையங்கள், பிரதேச சபைகள், பாடாசலைகள், தனியார் கல்வி நிலையங்கள் வாழை, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல், பூசைகளும் “வாணி விழா” வாக மகுடமிட்டு இன்று இடம்பெற்றன.
கல்முனை மாநகரமே இதற்காக விழாக்கோலம் பூண்டதாகக் காணப்பட்டதுடன், வீடுகளிலும், இந்து ஆலயங்களிலும் அறிவாலயங்களிலும் சிறார்களுக்கு பெரியோரின் ஆசியுடன் முதன் முதலாக ஏடுதொடங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம்