துன்னாலை விபத்தில் இளைஞன் மரணம்

வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கைச் சேர்ந்த செல்வரத்தினம் சிந்துஷன் (வயது-25) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த வியாழக்கிழமை (30) இரவு துன்னாலை கலிகைச் சந்திக்கு அருகாமையில் முன்னே சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

துன்னாலை விபத்தில் இளைஞன் மரணம்

எஸ் தில்லைநாதன்